Saturday, August 30, 2014
Friday, August 29, 2014
Gajananar or Gajavaktran
கஜாநநன் (Coutesy: Sri Vaishnavan, Facebook)
சிலர் பெருமாள் திருக்கோவில்களில், பிராஹாரத்தில் தும்பிக்கையுடன் காணப்படுபவரையே விஷ்வக்ஸேநர் என்று நம்பிக்கொண்டு இருக்கின்றனர். மற்றும் சிலர், அவரை பார்வதி புத்திரன் விநாயகர் என்று கருதி அவருக்கு தோப்புகரணம் போடுவர். அவையெல்லாமே தவறு.
அப்படியென்றால் துதிக்கையுடன் காணப்படும் அவர்தான் யார் ?. அவர்தான் “ கஜாநநன் “ என்று அழைக்கப்படும், விஷ்வக்ஸேநருக்குக் கீழ் பணிபுரியும் அநேகப் படைத் தலைவர்களுள் ஒருவர். ஜயத்ஸேநன், ஹரிவக்த்ரர், காலப்ரக்ருதி போன்ற படைத் தலைவர்களுள் முதன்மையானவர். இவருடைய முக்யவேலை திருக்கோயில்களை பராமரிப்பது, கோயிலுக்கு வந்து போவோர்களைக் கண்காணிப்பது, கோயிலைத் தூய்மையாக வைத்துக் கொள்வது போன்றவையாகும். ஆகவே நாம் இவரையும் வணங்க வேண்டும்.
இதனையே பராசர பட்டரும், தம்முடைய ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் “ விஷ்வக் ஸேநரின் சேனைத்தலைவர்களான. கரிமுகன் (கஜாநநன்), ஜயத்ஸேனன், கலாஹலன், சிம்ஹமுகன் முதலிய எந்த வீரர்கள் ஸ்ரீரங்க க்ஷேத்ரத்தை நான்கு திசைகளிலும் காத்துக் கொண்டு வருகின்றனரோ அவர்கள் நமக்குச் சுகத்தையளிக்கட்டும்” என்கிறார்.
விஷ்ணு ஆலயங்களில், சென்று எம்பெருமானை தரிசிக்கும் முன்னர், துவாரபாலகர்களை வணங்கிவிட்டு, பிறகு விஷ்வக்ஸேநரை மனதிற்குள் தியானித்துவிட்டு பிறகே பெருமாள் சந்நிக்குள் நுழைய வேண்டும். அதாவது அவர்கள் அனுமதியின்றி உள்ளேச் சென்று வேண்டிக்கொண்டால், அதற்கு எம்பெருமான் பலனளிக்கமாட்டார்.
Subscribe to:
Posts (Atom)